தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி… தேர்தல் ஆணையர் அறிவிப்பு…!!!

tamilnadu election date 2021

தமிழக தேர்தல் களம்

கடந்த சில நாட்களாகவே தமிழக தேர்தல் களம் சூடு கண்டுள்ளது. எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சிகளும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

 இந்நிலையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி என்று அறிவிக்கப்படும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் சற்றுமுன் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

 அதாவது ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும்,மே மாதம் 2-ஆம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தற்பொழுது அறிவித்துள்ளதார். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைககளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாக்களிக்க வரும் அனைத்து மக்களும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், சானிடைசர் உபயோகிக்கபட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டைவிட 34.6 % கூடுதலான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 1000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 வேட்புமனுத் தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்க உள்ளது எனவும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் மாதம் 19ஆம் தேதி எனவும், வேட்புமனு பரிசீலனை மார்ச் 20-ஆம் தேதி மற்றும் வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 22-ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது 40 நாட்களுக்கு முன்பாகவே சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவ, தமிழக தேர்தல் களம் மேலும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply