சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விண்ணப்பம் அளித்தவர்களிடம் வரும் 4ம் தேதி நேர்காணல்!

TNElection2021

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கான விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டு இருந்த நிலையில் வருகின்ற 4-ம் தேதி நேர்காணல் நடைபெறும் என கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை குறிவைத்து ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தங்களது காய்களை சாமர்த்தியமாக நகர்த்தி வருகின்றன.

தொகுதி பங்கீடு குறித்து இன்னும் சரியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப மனுக்களை அளிப்பதற்கான தேதியினை அறிவித்திருந்தனர்.

சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடஏராளமான விண்ணப்பங்களும் குவிந்தவண்ணம் உள்ளன.இந்நிலையில் எதிர்க் கட்சியான திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை இன்று துவங்கியுள்ள நிலையில் ஆளும் கட்சியான அதிமுக-வும் நேர்காணல் வருகின்ற 4-ம் தேதி நடைபெறும் என சற்றுமுன் அறிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இரு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்டும் வேட்பாளர்கள் யார் ? யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

Leave a Reply