நடிகர் டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் வருமானவரி சோதனை

நடிகர் டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் வருமானவரி துறையினர் சற்றுமுன் சோதனை நடத்தினர்.

நயன்தாரா நடித்த “இமைக்கா நொடிகள்” படத்தில் வில்லனாக நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.மேலும் இவர் ப்ளாக் ஃப்ரைடே,கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் முதலிய பல பிரபலமான படங்களை இயக்கியுள்ளார்.மேலும் நடிகை கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தையும் தயாரித்தவர் இவராவார்.

தற்போது இவர் நடிகை டாப்ஸி நடிக்கும் புதிய படமான தோபாராவை இயக்கி வருகின்றார்.இவரது மகளான ஆலியா காஷ்யப் சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் தனது பிகினி படங்களை வெளியிட்டு சர்ச்சைக்கு உள்ளானார்.

இந்நிலையில் சற்றுமுன் நடிகை டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அனுராக் காஷ்யப் டாப்ஸியை வைத்து படம் தயாரித்த வரும் நிலையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி உள்ளது தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply