news-in-tamil

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பார்சலில் அன்னதானம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் அன்னதானமானது பார்சலில் வழங்க திட்டமிட்டு இருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் முதன்மையிடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உண்டு. தினமும் இங்கு ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டவர்களும் கோவிலுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இக்கோவிலில் மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம்.கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் தினமும் அன்னதானத்தை எதிர்பார்திருந்தோர் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே கோவில் நிர்வாகம் சார்பாக கலவை சாதம் தினமும் காலையில் பார்சலாக கோவில் வாசலில் வழங்கப்பட்டது.

தற்பொழுது தமிழக அரசானது ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக அறிவித்து வரும் நிலையில் வயதானவர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதி அளித்தது. மேலும் அர்ச்சனை பொருட்களான பூக்கள் மற்றும் பழங்கள் போன்றவற்றையும் கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி அளித்தது.

தற்பொழுது மதிய நேரத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தை பார்சலாக வழங்கலாம் என முடிவெடுத்துள்ளது.இன்று மதியம் முதல் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சுமார் ஒரு வருட காலம் கழித்து மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்படுவது பக்தர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

%d bloggers like this: