TN Election 2021:அரசியலுக்கு குட்பை சொன்ன சசிகலா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும்,அதிமுக கட்சியின் முக்கிய பிரமுகருமான சசிகலா தான் அரசியலை விட்டு விலகுவதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

சசிகலா நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசைப்படி அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக ஆட்சி தொடர தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனவும், நமது பொது எதிரியான திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் தான் என்றும் பதவிக்காகவும்,பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபொழுது அவருடைய எல்லா எண்ணத்தை நிறைவேற்றி ஒரு சகோதரியாக அவருக்கு உறுதுணையாக இருந்ததாகவும் இதற்கு மேலும் அம்மா அவர்களின் கனவு ஆட்சி தொடர தான் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் என்மீது அன்பு காட்டிய ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், தமிழகத்தின் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.பெங்களூரு சிறையிலிருந்து வெளியேறிய பொழுது நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்திருந்த சசிகலா இன்று அரசியலில் விட்டு ஒதுங்குவது அதிமுக தொண்டர்களுக்கும்,அமமுக தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply