TN Election News:தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு காங்கிரசை மீண்டும் மீண்டும் அழைக்கும் திமுக…

தொகுதி பங்கீடு குறித்து இன்னும் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் காங்கிரசை பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

தொகுதி பங்கீடு குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில் மூன்றாவது கட்டமாக திமுக தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளது.


காங்கிரஸ் திமுகவிடம் ஏற்கனவே 41 தொகுதிகளை கேட்டிருந்த நிலையில் திமுக தர மறுத்தது.எனவே திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து மாவட்ட தலைவர்களிடம் காங்கிரஸ் கட்சி கருத்துக்கணிப்பு கேட்க ஆரம்பித்தது. இத்தனை வருடங்களாக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் அணியாக போட்டியிடுவது குறித்து ஆலோசித்தது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சற்றுமுன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முக ஸ்டாலின் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரசிற்கு திமுக மூன்றாவது கட்டமாக அழைப்பு விடுத்துள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற ஆர்வம் மக்களிடையே எழுந்துள்ளது.

Leave a Reply