TN Election News:கமலுடன் கூட்டணி அமைக்கலாமா? கருத்து கேட்கும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்!

கமலுடன் கூட்டணி அமைக்கலாமா? என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களிடம் கருத்துக்கணிப்பு கேட்டுள்ளார்.

இதுவரை திமுகவுடன் கூட்டு சேர்ந்து சட்டமன்றத் தேர்தல்களில் களமிறங்கிய காங்கிரஸ் இம்முறை சற்று தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளது. தொகுதி பங்கீடு தான் இதற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவுடன் காங்கிரஸ் 41 தொகுதிகள் கேட்ட நிலையில் அதை திமுக தலைமை தர மறுப்பதாக கூறப்படுகின்றது. இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவுகள் எட்டப்படாமல் உள்ளது .

இந்நிலையில் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் கருத்து கேட்டுள்ளார்.

பெரும்பாலோனோர் கமலுடன் கூட்டணி அமைப்பதையே விரும்புவதாகவும்,குறைவான தொகுதிகள் பெற்று திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என கூறியதாகவும் தெரிகின்றது. இந்நிலையில் காங்கிரஸ் திமுக கூட்டணி நீடிக்குமா ?அல்லது கைவிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Leave a Reply