TN Election News:திமுகவுடன் கூட்டணி உறுதி…விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுகவுடன் கூட்டணி சற்றுமுன் உறுதியான நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட்டணி கட்சிகள் பற்றிய விவரங்களை அதிமுக மற்றும் திமுக கட்சிகள் வெளியிடாமல் இருந்தது.

பல்வேறு கட்சிகளுக்கிடையில் கூட்டணி பேச்சுவார்த்தையானது மும்முரமாக நடந்து வரும் நிலையில் இன்று காலை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சந்தித்து இட ஒதுக்கீடு தொடர்பாக பேசினார்.

தேர்தலில் போட்டியிட இரு இலக்கங்களில் தொகுதியினை பெறுவதற்கு ஆர்வம் காட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி கடைசியாக 6 தொகுதிகளை உறுதி செய்துள்ளது. இதை இரு கட்சிகளும் சற்று முன்னர் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.

இந்நிலையில் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அதை வாங்க கூடாது என விடுதலை சிறுத்தை கட்சியின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடைசியாக திருமாவளவன் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசிய நிலையில் தொகுதி பங்கீடு சுமூக நிலையை எட்டியுள்ளது.இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளிலும் தனி சின்னத்தில்போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply