news-in-tamil tamilnadu-election

TN Election News:திமுக வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மார்ச் 10ஆம் தேதி வெளியீடு!

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மார்ச் 10-ஆம் தேதி வெளியிடப்படும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி கட்சியினரிடையும்,மக்களிடையும் எழத்தொடங்கியது.

இந்நிலையில் ஆளும் கட்சியான அதிமுகவும்,எதிர்கட்சியான திமுகவும் தங்களது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்காணல்களை தற்பொழுது நடத்தி வருகின்றன.

நேர்காணல் ஒருபுறமிருக்க கூட்டணி கட்சிகளுக்கான முடிவெடுப்பும் ஒருபுறம் நடந்தவண்ணம் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்குமா ?இல்லையா? என்ற கேள்வியும் ஒருபுறம் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் பட்டியல் வருகிற மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: