news-in-tamil tamilnadu-election

TN Election News:பாமகவின் அசத்தல் தேர்தல் அறிக்கைகள்…!!!

சட்டமன்ற தேர்தலில் பாமக-விற்கான தேர்தல் அறிக்கையினை கட்சியின் தலைவர் ராமதாஸ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

2021-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம்தேதி நடைபெறும் என்று சென்றவாரம் அறிவிக்கப்பட்டது.கூட்டணி கட்சிகளுக்கிடையில் தொகுதி பங்கீடுகள்,வேட்பாளர்கள் ஆகியவற்றை பற்றி கட்சிகளிடையே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியானது தங்கள் தேர்தல் அறிக்கைகளை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

இதில் மக்களை கவரும் அட்டகாசமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை பன்னிரண்டாம் வகுப்புவரை அரசே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களை அரசே செலுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 500 நிதியுதவியும்,பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வறிக்கையினை கட்சியின் தலைவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

%d bloggers like this: