TN Election News:அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்…!

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இன்று இபிஎஸ்,ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சட்டமன்ற தேர்தலுக்கான அலை வீசப்பட்ட நேரத்தில் இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடையே எழுந்தது. நடிகர் கமலஹாசன் அரசியல் களத்தில் இறங்கி கட்சி பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்ததை ஒட்டி ரஜினி ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினி மாவட்ட செயலாளர்கள் 37 பேரை அழைத்து கடந்த நவம்பர் மாதம் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில் தான் அரசியலில் மும்மரமாக இறங்க போவதாக அதிரடியாக அறிவித்தார்.

அவருடைய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த வேளையில் தனது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை அரசியலில் இந்த சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என அறிவித்தது அனைத்து ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.

இந்நிலையில் ரஜினியிடமிருந்து ஏதாவது அறிவிப்பு வருமா? என நிர்வாகிகள் இலவு காத்த கிளி போல் காத்திருந்தனர். எனவே காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் சற்று முன் இணைந்தனர்.

Leave a Reply