Sivarathiri Viratham:சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பது எப்படி ?

மாத மாதம் சிவராத்திரி வந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை வரும் மகா சிவராத்திரி என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது.வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியை நாம் மகாசிவராத்திரி என்கிறோம். சிவராத்திரி நாளில் மூன்றாம் காலத்தில் சிவனை வழிபடுவது சிறந்தது என புராணங்கள் கூறுகின்றன.

மூன்றாம் காலத்தில் சிவனை வழிபடும் போது எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும் அந்த பாவங்கள் நம்மை விட்டு விலகிப் போகும் போகும் என்பது ஐதீகம்.

சிவராத்திரி விரதத்தை கடை பிடிப்பது எப்படி? என்று பார்ப்போம். முதல் நாளில் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு ஆடம்பரங்களை தவிர்த்து மனதார சிவபெருமானை நினைத்து வழிபட வேண்டும்.

சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து புனித நீராடி சூரியனை வழிபட்டு, வீட்டிலேயே விளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டு பின் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

சிவராத்திரி பூஜை கடைபிடிக்கும் இடத்தை நன்றாக சுத்தம் செய்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.உங்களால் முடிந்தால் பகல் நேரத்திலும் கோவிலுக்கு சென்று உச்சிக்கால பூஜை முடித்து வரலாம் .கோவிலில் அபிஷேகம் செய்வதற்கு உங்களால் முடிந்த இளநீர்,பால் போன்ற உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தரலாம். மாலை நேர பூஜை அதற்கு அடுத்தாற்போல் இரவு நேர பூஜை என நான்கு கால பூஜையிலும் கலந்து கொள்வது மிகவும் சிறப்பு.

வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் நான்கு கால பூஜைகளில் பங்கு பெறலாம்.இரவு நேரம் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே இந்த பூஜை கடைபிடிக்கும் ராத்திரியானது சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

சிவராத்திரி அன்று அவரவர் குலதெய்வ கோவில்களுக்கு சென்று பழக்கமும் எல்லா ஊர்களிலும் உண்டு. இவ்வாறு சிவராத்திரியன்று மனதாலும் உடலாலும் தூய்மையை கடைபிடித்து கோவிலுக்குச் சென்று வர கஷ்டங்கள் நீங்கி வீட்டில் மங்களம் குடிகொள்ளும் என்பதே முன்னோர்கள் சொன்ன உண்மை.

சிவராத்திரி அன்று நாம் பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தால் மற்ற நாட்களில் கிடைக்கும் பலன்களை காட்டிலும் 100 மடங்கு அதிக பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.எனவே சிவராத்திரியன்று மனதாலும் உடலாலும் தூய்மை கொண்டு இறைவனை மனமுருக வேண்டி இறையருள் பெறுவோம்.

Leave a Reply