TN Election News:உறுதியானது திமுக-மதிமுக கூட்டணி… 6 தொகுதிகள் ஒதுக்கீடு…!

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் குறித்தும்,தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை செய்வதற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. திமுகவும் அதிமுகவும் தங்களது கூட்டணி கட்சிகளை படிப்படியாக உறுதி செய்து வருகின்றன.

இரு தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுகவிற்கு இடையே கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் மதிமுகவானது திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்டு இருந்த நிலையில் ஆறு தொகுதிகள் மட்டுமே தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 தொகுதிகளிலும் பம்பரம் சின்னத்தில் போட்டியிடாமல் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவுடன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என கருணாநிதியிடம் நான் உறுதியளித்து இருந்தேன் எனவும் கூறினார். மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடாமல் வேறு சின்னத்தில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.

Leave a Reply