Rasi Palan: இன்றைய ராசி பலன் 08-03-2021

மார்ச் – 8-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் இந்த நாள் உயர்வான நாள். இன்று மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும்.பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.புதிதாக வீடு,வாகனங்கள் வாங்க யோகங்கள் கிட்டும் நாள்.அதிர்ஷ்டங்கள் பெருக பின்பற்ற வேண்டிய எண் 9.

ரிஷபம்

சந்திராஷ்டமம் இருப்பதால் கவனத்துடன் செயல்படுவது நல்லது.காரியத்தில் கண்ணாய் இருக்க வேண்டிய நாள் இது.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் சுபச் செய்திகள் கூடிவரும். சில குழப்பங்கள் இருக்கும். ராசியான எண் 3.

மிதுனம்

கவலை இல்லாமல் மனம் லேசாக இருக்கும் நாள் இது. பணவரவு பெருகும்.சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.உயரதிகாரிகளின் சந்திப்பு நிகழும்.வியாபாரத்தில் அனுகூலம் கூடும் அதிர்ஷ்ட எண் 4.

கடகம்

கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். சிறிய கருத்து வேறுபாடுகள் கூட பெரிய பிரச்சினையாக வரலாம்.வண்டி வாகனங்களை சரியாக பராமரிப்பு செய்வது சிறந்தது. அதிஷ்ட எண் 7.

சிம்மம்

சிம்மம் இசைத் துறையில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.கலைத்துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக அமையும். பெற்ற பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பெண் குழந்தைகளுக்கு திருமண செய்தி கைகூடிவரும். அதிர்ஷ்ட எண் 3.

கன்னி

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.எதிர்பாராத நன்மைகள் கிட்டும்.கல்வியில் மாணவர்கள் மிகச் சிறந்து விளங்குவார்கள்.வெற்றிகள் குவியும் உன்னதமான நாளிது.அதிர்ஷ்ட எண் 4.

துலாம்

இந்த நாள் மிகச்சிறந்த நாளாக அமையும்.வேலை பார்க்கும் இடங்களில் உயர் பொறுப்புகள் வந்து சேரும்.இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வரும்.வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டு. எதிர்பார்த்த தனலாபம் உண்டு.அதிர்ஷ்ட எண் 2.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு தனலாபம் கிட்டும் நாள்.குடும்பத்தில் சுபச் செய்திகள் தேடிவரும்.நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த திருமணம் கைகூடும்.அலுவலகத்தில் இடமாற்றம் வரும்.பெண்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.

தனுசு

படபடப்புடன் காணப்படுவீர்கள்.அலுவலக விஷயங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும்.தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.டென்ஷனை தவிர்த்திடுங்கள்.வியாபாரத்தில் அனுகூலம் கூடும். அதிர்ஷ்ட எண் 2.

மகரம்

சுக்கிர பகவான் மிகுந்த யோகத்தை கொடுப்பார்.மனைவி வழியில் யோகம் வந்து சேரும்.அலுவலகத்தில் உயர் பொறுப்புகள் கிடைக்கும்.மனக்குழப்பத்தை தவிர்த்துக் கொண்டால் வெற்றி கிட்டும் நாள். அதிர்ஷ்ட எண் 1.

கும்பம்

மகிழ்ச்சியை தரக்கூடிய நாள்.எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.உயர்வான வெற்றி கிடைக்கும்.பொருளாதார மேன்மை ஏற்படும்.அரசு வழியில் அனுகூலம் ஏற்படும்.உயர்ந்த சந்திப்புகளும் நல்ல நண்பர்களின் சந்திப்பு நிகழும்.அதிர்ஷ்ட எண் 5.

மீனம்

உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல்நலத்தில் கூடுதல் அக்கறை தேவை.குடும்பத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.வியாபாரத்தில் நல்ல செய்திகள் தேடிவரும். மாணவர்களுக்கு நல்ல நாளாக அமையும்.வெளிநாடுகளிலிருந்து படிப்பதற்கு நல்ல செய்திகள் தேடி வரும்.அதிர்ஷ்ட எண் 6.

Leave a Reply