news-in-tamil tamilnadu-election

TN Election News:குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்! அசத்தும் ஸ்டாலின்… கேள்விக்கணைகளை தொடுத்த பாஜக..!!!

தான் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தல் களமானது சூடுபிடித்து வரும் நிலையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் அசத்தலான அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்ததையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பயிர் கடன்களை உடனடியாக நீக்கி அரசாணை வெளியிட்டார்.

ஆட்சிக்கு வரும் முன்னரே அதிமுகவானது விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து அடுத்து ஆட்சிக்கு வர வியூகம் வகுத்தது. ஸ்டாலின் தான் சொல்வதை தான் முதலமைச்சர் செய்கின்றார் என கருத்து தெரிவித்தார்.

தற்பொழுது தான் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என மற்றொரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இந்த அறிவிப்பிற்கு எதிராக தலைவர் வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது யாதெனில் இரண்டு ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக குடும்ப தலைவிகளுக்கு மட்டும் எப்படி ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் மத்திய அரசு திட்டங்களை தமிழக பெண்களுக்கு பெருமளவில் பயன் தருவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: