TN Election News: ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கருத்து மோதல்… வேட்பாளர் தேர்வு தான் காரணமா?

அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.

அதிமுக சட்டப்பேரவை தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான விருப்பமனு பெறப்பட்டு வந்தது.எனவே,அவர்களை நேர்காணல் செய்யும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

6 தொகுதிகளின் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.மற்ற தொகுதி வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது.

இன்று காலை மகளிர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இபிஎஸ்,ஓபிஎஸ் ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது.ஆனால் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை.துணை முதல்வர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும் அமைச்சர் வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் முதல்வர் வீட்டில்ஆலோசனை நடத்தினர். எனவே வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும்,தொகுதி ஒதுக்கீடு செய்வதிலும் இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply