news-in-tamil tamilnadu-election

TN Election News:திமுக 1000…அதிமுக 1500… அள்ளிவிடும் தேர்தல் அறிக்கைகள்!

குடும்ப தலைவிகளுக்கு மாதமாதம்1500 ரூபாய் அளிக்கப்படும் என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ஆளும் கட்சிகளும்,எதிர்க்கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை ஒவ்வொன்றாக அறிவித்த வண்ணம் உள்ளன.இதுவரை மக்களை கவரும் வண்ணம் திட்டத்தை அறிவித்த கட்சிகள் தற்போது மகளிரணியினை குறி வைத்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்பொழுது செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் கசிந்து விடுகிறது என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையினைத்தான் திமுக அறிவிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: