news-in-tamil tamilnadu-election

TN Election News:அதிமுகவிலிருந்து தேமுதிக விலகல்…!!!

தொகுதி பங்கீடு விவகாரத்தில் சரியான முடிவு எட்டப்படாததால் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்து கட்சிகளும் தங்கள் தொகுதிகளை கைப்பற்றுவதற்காக எதிர்க் கட்சிகளும்,ஆளும் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்திய வண்ணம் உள்ளன.


எதிர்க்கட்சியான திமுக வானது தங்களது தொகுதி பங்கீடுகளை ஓரளவுக்கு முடிந்துவிட்டது.ஆனால் அதிமுகவில் இழுபறி நிலை நீடித்த வண்ணமுள்ளது.இந்நிலையில் தேமுதிக அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது.

தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுக மறுத்ததால் மாவட்ட கழக செயலாளர்கள் உடன் உடனடியாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது.கூட்டத்தில் ஒரு மிதமாக கூறப்பட்ட கருத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் எடப்பாடி தொகுதியிலும் அதிமுக மண்ணை கவ்வும் என்றும் அதிமுகவால் டெபாசிட் கூட பெற முடியாது என பேசியுள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: