TN Election News:எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம்-கமல்ஹாசன் அறிவிப்பு

அதிமுகவிலிருந்து தேமுதிக விலகிய நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அதிமுகவும்,எதிர்க்கட்சியான திமுகவும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் நேர்காணல் நடத்தி முடித்த பிறகும் தொகுதிப் பங்கீட்டில் முடிவு எட்டப்படாததால் வேட்பாளர்களை இன்னும் அறிவிக்காமலேயே உள்ளது.

திமுக கூட்டணிகொங்குநாடு கட்சியை தவிர மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டது. ஆனால் அதிமுக தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலையில் இருந்தது.

இதுவரை மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி முடித்தும் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருந்தது.இந்நிலையில் தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுக கொடுக்க மறுத்ததால் கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக இன்று அறிவித்தது.

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திட்டம் உள்ளதா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன் எங்கள் கட்சி யார் வந்தாலும் அனைவருக்கும் என பதிலளித்துள்ளார்.

Leave a Reply