TN Election News:திமுகவின் புது வியூகம்… 30 ஆண்டுகளில் இதுவே முதல் முறை…!!!

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதவாறு திமுக இந்த ஆண்டு முதன்முறையாக 187 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடானது ஏறக்குறைய நடந்து முடிந்த நிலையில் தொகுதிகளுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் 174 பேரும் கூட்டணி கட்சியினர் 13 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.இது கடந்த 30 ஆண்டுகளில் நிகழாத ஒரு நிகழ்வாகும்.

திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட போகின்றது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிடுகின்றது.

மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மற்றொரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது.இதைத்தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply