TN Election News:தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

வருகின்ற சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில் நேற்று கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்தது.

இந்நிலையில் வருகின்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுமா? அல்லது வேறு எதன் கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா ?என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அமமுக கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தற்பொழுது தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடுவதற்காக தேமுதிகவிற்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்பொழுது ஒதுக்கியுள்ளது. தேமுதிக கட்சி தொடங்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை 3 சட்டப்பேரவை தேர்தல்களையும் 3 நாடாளுமன்ற தேர்தல்களையும் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply