நடிகர்களின் சம்பளம் குறித்து வருத்தப்பட்ட நடிகை சமந்தா…!!!

நடிகர்,நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து நடிகை சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள்களைவிட நடிகைகள் குறைவாக சம்பளம் வாங்குவது என்பது வழக்கத்தில் இருக்கும் ஒன்று. குறிப்பாக நடிகர்கள் ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்திற்கு சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர்.அதுவும் படம் ஹிட்டாகிவிட்டால் அந்த நடிகருக்கு இருக்கும் மார்க்கெட் ரேட் தனிதான்.

ஹிந்தி திரையுலகில் நடிகைகள் ஒரு படத்திற்கு 13 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர்.தென்னிந்திய நடிகைகளில் நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு 4 கோடி சம்பளம் வாங்கி சம்பளப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

அவரை தவிர்த்து மற்ற அனைத்து நடிகைகளுக்கும் சம்பளம் என்பது குறைவுதான்.இதுகுறித்து நடிகை சமந்தா பேசும்பொழுது ஒரு நடிகை முன்னணி மூன்று கதாநாயகிகளில் ஒருவராக இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்பது மிகக் குறைவுதான் என்றும் அந்த நடிகை வாங்கும் சம்பளமானது பட்டியலில் உள்ள முதல் 20 நடிகர்கள் வாங்கும் சம்பளத்துடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் நடிகைகள் சம்பளத்தை உயர்த்தி கேட்டால் அதை பிரச்சனை யாக்குகின்றனர் என்றும் நடிகர்கள் சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்டால் உடனடியாக செய்து தருகின்றனர் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply