TN Election News:பாஜகவில் இணைந்தார் நகைச்சுவை நடிகர் செந்தில்…!!!

புகழ்பெற்ற நகைச்சுவை நகைச்சுவை நடிகர் செந்தில் சற்றுமுன் பாஜகவில் இணைந்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களமானது பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. ஆளும் கட்சிகளும்,எதிர்க்கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களின் தேர்வினை ஓரளவிற்கு நடத்தி முடித்த நிலையில் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும்
படிப்படியாக அறிவித்து வருகின்றது.

நாளை வேட்பு மனுத்தாக்கல் நடக்க இருக்கும் நிலையில் இன்று மாலை வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவும் தங்களது வேட்பாளர்களின் பட்டியலையும் அறிவித்த வண்ணம் உள்ளது.

இதற்கு அடுத்த கட்டமாக அனல்பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்ள இரு கட்சிகளும் தயாராகி வருகின்றன. புகழ்பெற்ற சினிமா நடிகர்களை பயன்படுத்துவது அரசியல் வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்.அதிமுகவும் இதைத்தான் கடந்த தேர்தல்களில் மேற்கொண்டது.

மேலும் நடிகர்,நடிகைகளும் அரசியலில் இணைவதற்கு ஆர்வத்துடன் உள்ளனர்.இந்நிலையில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் செந்தில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே நடிகைகள் குஷ்பு,கவுதமி,காயத்ரி ரகுராம் பாஜகவில் ஏற்கனவே இணைந்துள்ளனர். இந்த பட்டியலில் நடிகர் செந்தில் தற்பொழுது இணைந்துள்ளார்.

Leave a Reply