TN Election News:15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கின்றார் முதலமைச்சர் பழனிசாமி…!!!

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி குறித்தும்,வேட்பாளர்களின் பட்டியல் குறித்தும் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகின்றன.

எதிர்கட்சியான திமுக இன்று தனது தொகுதி வேட்பாளர்கள் இறுதி பட்டியலை வெளியிட்டது. அதிமுக தனது முதல் கட்ட பட்டியலை இதுவரை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்குகின்றது.

நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இவ்விரு நாட்களும் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. அடுத்து 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்க இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் வருகின்ற 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார். அவரை தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் அன்றைய தினமே செய்யவிருக்கின்றனர்.

Leave a Reply