TN Election News:வெளியானது திமுக இறுதி வேட்பாளர் பட்டியல் …!!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான திமுக கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மு.க ஸ்டாலின்.

திமுக கட்சியில் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி கட்சிகள் குறித்து இறுதி முடிவு எட்டப்பட்ட நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலும், துரைமுருகன் காட்பாடி தொகுதியிலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர்.

பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்களுக்கும், தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு அதிக அளவில் அளிக்கப்பட்டுள்ளது.இம்முறை வாரிசுகளுக்கு இடமளிக்கப்படவில்லை.முப்பதுக்கும் மேற்பட்ட அரசியல் புள்ளிகளின் வாரிசுகள் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவற்றை கட்சித் தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக களம் இறங்குகின்றது.இதில் 14 இடங்களில் பாஜகவை நேரடியாகவும் 120 இடங்களில் அதிமுகவை நேரடியாகவும் எதிர்த்து போட்டியிடுகின்றது.

மேலும் 12 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர்.வேட்பாளர் பட்டியலை அறிவித்த ஸ்டாலின் இது வேட்பாளர் பட்டியல் அல்ல வெற்றி பட்டியல் என்று கூறி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Leave a Reply