DMK News:வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… சிறப்பம்சங்கள் என்ன ஒரு பார்வை…!!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான தெளிவான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை பெரும்பாலும்
மாணவர்கள்,பெண்கள்,தொழில் துறையினரை முன்னிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இலவசங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.அறிக்கையின் சிறப்பம்சங்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

இதில் பெரும்பாலும் குடும்பத் தலைவிகளை கவரும் வண்ணம் திட்டங்கள் வெளியாகியுள்ளன.குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, கொரோனா நிவாரணம் ரூபாய் 4000, கேஸ் மானியம் ரூபாய் 100, மகப்பேறு உதவித்தொகை ரூபாய் 24 ஆயிரம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு 40%, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச நாப்கின், பெண்களுக்கு 12 மாதம் பேறுகால விடுப்பு, ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு, கூடுதல் சர்க்கரை, திருமண உதவித் தொகை 60 ஆயிரம் என பெண்களை கவரும் வண்ணம் பல்வேறு அசத்தலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளை கவரும் பல்வேறு திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளது அவை நெல்லுக்கான ஆதார விலை ரூபாய் 2500 ,கரும்புக்கு 4000, உழவர் சந்தையை மேம்படுத்துதல், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படுதல், தினக்கூலி 300 ரூபாயாக உயர்த்துதல் போன்ற இடங்கள் வெளியாகியுள்ளன. அனைத்துத் துறைகளையும் கவரும் வகையில் மொத்தம் 550 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது திமுக

Leave a Reply