TN Election News:பெரும் தலைவர்களின் வேடமணிந்து பிரச்சாரத்திற்கு தயாராகும் நாடக கலைஞர்கள்…!!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மதுரையைச் சேர்ந்த மேடை நாடகக் கலைஞர்கள் அரசியல் பிரமுகர்களின் வேடமணிந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் கவனக் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் பிரபல சினிமா கலைஞர்கள்,நாடகக் கலைஞர்கள் ஆகியோரைக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்வது என்பது வழக்கத்தில் இருக்கும் ஒன்றுதான்.

மதுரை நாடக கலைஞர்கள் பிரபல அரசியல் பிரமுகர்கள் போன்று வேடமணிந்து பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றனர்.இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்,ஜெயலலிதா,கருணாநிதி ,நடிகர் நடிகர் விஜயகாந்த் ஆகியோரைப் போன்று வேடமணிந்து அசத்தியுள்ளனர்.

கொரோனாவினால் வாழ்வாதாரத்தை இழந்த நாடக கலைஞர்கள் இந்த சட்டமன்ற தேர்தல் தங்களது சம்பளத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று ஆறுதல் கொள்கின்றனர்.இதில் எம்ஜிஆரைப் போன்று வேடம் அணிந்த ராமச்சந்திரன் கூறுகையில் எம்ஜிஆர் போன்று வேடம் அணிவதற்கு நான் உணவு மற்றும் உடற்பயிற்சி செய்து மிகவும் மெனக்கெட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அரசியல் கட்சியினர் எங்களை வாக்கு சேகரிப்பதற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்றும் கொரோனா சமயம் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதித்த போது எங்களை எந்த அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை என்று மிகவும் வேதனையுடன் தெரிவித்தார்.மேலும் எங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த அரசியல் கட்சியினர் நல்ல திட்டத்தை தீட்டினால் நன்றாக இருக்கும் என்று கூறினர்.

Leave a Reply