TN Election News:வாக்குறுதிகளை அள்ளி வீசிய அ தி மு க… மக்களை கவரும் தேர்தல் அறிக்கை… ஒரு பார்வை!

therthal arikkai

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையினை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெளியிட்டனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கையினை கட்சித்தலைவர் மு க ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். இந்நிலையில் ஆளும் கட்சியான அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் மக்களை கவரும் வகையில் அட்டகாசமான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.எனவே,நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தேர்தல் அறிக்கையினை கூட்டாக வெளியிட்டனர்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை அங்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என முதலமைச்சர் கூறி இருந்த நேரத்தில் பின்வரும் சில முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சில:

-குடும்ப தலைவிகளுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மாதம் ரூபாய் 1500 வழங்கப்படும்.

-குடும்பத்துக்கு விலையில்லா கேஸ் சிலிண்டர் ஆண்டுக்கு ஆறு வழங்கப்படும்.

-அரிசி அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும்.

-விலையில்லா கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும்.

-மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.

-வீட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும்.

-ரேஷன் பொருட்களை கடையில் வாங்க தேவையில்லை வீடு தேடி வழங்கப்படும்.

-இரட்டை குடியுரிமை வழங்கப்படும. சில முக்கிய இடம் பெற்றுள்ளன.

-உழவர்களுக்கு வருடம் 7500 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து அறிக்கைகளும் இலவசங்களை குறிவைத்து வெளியிடப்பட்ட நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் மகளிரை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply