Raasi Palan:இன்றைய ராசி பலன் 16.03.2021

மேஷம்

இன்று எல்லா காரியங்களிலும் கால தாமதம் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மன அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமிருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்

இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை.பல முறை ஆலோசித்துவிட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. அலுவலகத்தில் நீண்ட நாள் இருந்து வந்த பகைகள் நீங்க உரிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் தனலாபம் உண்டாகும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும்.

மிதுனம்

இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும்.சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்

இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நினைத்ததற்கு எதிர்மறையாக நடக்கும்.கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்றைய நாள் எதிலும் ஜெயம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் கொடுக்கப்படும். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்களில் கவனம் வேண்டும்.

கன்னி

இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் ஜெயம் உண்டாகும். நீங்கள் ஒன்றை நினைக்க அது ஒன்று நடக்கும். எனினும் நடப்பவை நல்லவையாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான ஒரு முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

துலாம்

இன்றைய நாள் எதிலும் நிதானத்துடன் செயலாற்றுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கும்.

விருச்சிகம்

இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுங்கள். தொழில் மற்றும் வியாபாரம் சம்மந்தமான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

இன்றைய நாள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. விநாயகப்பெருமானை வணங்குவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிட்ட வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பு என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே உறவு சுமூகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண்விரையம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நன்று. மன அமைதி இருக்கும்.

கும்பம்

இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க திட்டம் போட்டு செயலாற்ற வேண்டும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க வேண்டியதிருக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் வகையில் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

மீனம்

இன்றைய நாள் எதிலும் உற்சாகத்துடன் செயலாற்றக் கூடிய நாள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் எளிதாக எதிர்கொள்வீர்கள். வீண் விரயங்களை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply