TN Election 2021:காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு… சிறப்பம்சம் என்ன ?

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மாநில தலைவர் கே எஸ் அழகிரி இன்று வெளியிட்டார்.

சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

அதன் சிறப்பம்சங்கள்:

-உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

-முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவை நினைவாக்கும் பொருட்டு உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்படும்.

-தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க புது திட்டங்கள் உருவாக்கப்படும்.

-புதிதாக தொழில் தொடங்க ஏற்பாடு செய்பவர்களுக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்படும்.

-சிறு மற்றும் குறு தொழில் புரிவோருக்கு கொரோனா காலத்தில் பெற்ற வங்கிக் கணக்கில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.

-தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

– கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் சம உரிமை அளிக்கப்படும்.

-நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

-முதியோருக்கு ஓய்வூதியம் அஞ்சல் அலுவலகம் வழியே நேரடியாக அளிக்க வழி செய்யப்படும். மேலும் பல அம்சங்களும் இடம் பெற்றுள்ளன

Leave a Reply