TN Entertainment:தன் மகனுக்கு ஆசையாய் முருகனின் பெயர் சூட்டியுள்ளார் நடிகர் கார்த்தி!

கார்த்தி தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு கந்தன் என முருகனின் பெயரை சூட்டியுள்ளார்.

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிகர் சூர்யாவின் அண்ணனும் ஆவார்.இவர் வெளிநாட்டில் பொறியியல் படிப்பை முடித்து இருந்தாலும் தனது அபார நடிப்பின் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

கிராமத்து கதாபாத்திரமாக இருந்தாலும், நகரத்து கதாபாத்திரமாக இருந்தாலும் நன்றாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர். இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, பையா மற்றும் மெட்ராஸ் போன்றவை பெரிதாகப் பேசப்பட்ட படங்கள்.

இவரது இவர் ரஞ்சனி என்ற பெண்ணை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார்.கார்த்தி-ரஞ்சனி தம்பதிக்கு 2013ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு உமையாள் என்று பெயர் சூட்டினர்.

இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து கார்த்தி-ரஞ்சனி தம்பதியினருக்கு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது குழந்தைக்கு கந்தன் என்று முருகனின் பெயரை சூட்டியுள்ளார் நடிகர் கார்த்தி.

மேலும் ‘கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக “கந்தன்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்… அப்பா’ என்று வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply