Enjoy Enjaami:திரும்பத் திரும்ப ரிப்பீட் மோடில் கேட்க வைக்கும் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் …

பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மாரி 2 படத்தில் ‘ரவுடி பேபி’, சூரரைப்போற்று படத்தில் ‘காட்டு பயலே’, இறுதிச்சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’ என்ற புகழ்பெற்ற பாடல்களை பாடி ஹிட்டடித்த பாடகி தீ. இவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளாவார்.

இவர் தனது தந்தையான சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகர் தெருக்குரல் அறிவுடன் இணைந்து ‘Enjoy Enjaami’ எனப்படும் இண்டிபெண்டன்ட் பாடலை பாடியுள்ளார். இப்பாடலின் ஆடியோ கடந்த மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. தப்பு இசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடல் வித்தியாசமான பின்னணி இசையுடனும், கலர்ஃபுல்லான வீடியோவுடன் காண்போரை திரும்பத் திரும்ப ரசிக்க செய்கின்றது.

இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ள இந்த பாடல் வெளிவந்த இரண்டு நாட்களிலேயே பத்து லட்சம் பார்வைகளை தாண்டிய முதல் இண்டிபெண்டன்ட் பாடல் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘Enjoy Enjaami’ தற்பொழுது வெளியிடப்பட்ட ஒரே வாரத்தில் யு டியூபில் மூன்று கோடிக்கு மேல் பார்வைகளை தாண்டி உள்ளது. பஞ்சத்தில் ஊர்விட்டு ஊர் போய் பிழைக்கும் தேயிலைத் தோட்டத்து பணியாளர்களின் அடிநாதமே இப்பாடலின் கருவாகும். மேலும் பாடலின்,


“நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் சேழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே”

என்ற வரிகள் கேட்கும் போது நம் கண்களில் ஒரு துளி கண்ணீர் வராமல் இருக்காது. புது அனுபவத்துடன் காதுகளுக்கும் கண்களுக்கும் இனிமை தரும் பாடலை பல்வேறு பிரபலங்களும் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.இப்பாடல் இனியும் பல கோடி பார்வைகளைத் தாண்டும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply