TN Election News:ஐடி ரெய்டு என்னும் பெயரில் எதிர்க்கட்சிகளை பயமுறுத்துகிறது மத்திய அரசு …கனிமொழி காட்டம்…!

வருமான வரித்துறை சோதனையின் மூலமாக எதிர்க்கட்சியினரை பாஜக அச்சுறுத்துகிறது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் என்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது திமுக எம்பி கனிமொழி அவருடன் இருந்தார்.மேலும் திமுகவின் கூட்டணி கட்சி தொண்டர்களும் உடன் இருந்தனர்.அப்போது செய்தியாளரிடம் பேசிய கனிமொழி வருமான வரித்துறை சோதனை மூலமாக எதிர்க்கட்சியினரை பாஜக தொடர்ந்து பயமுறுத்தி வருகின்றது.

வேட்பாளர்களை அச்சுறுத்தி பார்த்தால் தேர்தலில் வெற்றி அடைந்து விடலாம் என பாஜக நினைத்து கொண்டுள்ளது என தெரிவித்தார்.உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியும்.இதெற்கெல்லாம் திமுக பயப்படாது என்று தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த பொழுது திமுக அதை தைரியமாக எதிர்த்து என்றும் தெரிவித்தார்.ஆனால் இன்று தேர்தலை காரணம் காட்டி ஓட்டு பெற வேண்டும் என்பதற்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக கூறுகின்றது என்று தெரிவித்தார்.

மக்களின் மனதை வென்று திமுக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்று தெரிவித்தார்.உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலமாக உங்களிடம் இருந்து பெற்ற மக்களுக்கு 100 நாட்களுக்குள் கட்டாயம் பதில் அனுப்படும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply