Tamilnadu Election Latest Update: கன்னியாகுமரி பிரச்சாரத்திற்கு தயாராகும் பிரதமர் மோடி…!!!

PM Modi

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக உறுப்பினரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இம்மாத இறுதியில் கன்னியாகுமரி வரவிருக்கிறார்.

சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைந்தது.ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்சியின் தலைவர்களும் அவர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடக்கவிருக்கும் நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடக்கவிருக்கின்றது.

காங்கிரஸ் கட்சியின் எம் பி வசந்தகுமார் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த நிலையில் அத்தொகுதி காலியாக உள்ளது.எனவே பாராளுமன்ற தொகுதிக்கு ஆறாம் தேதி தேர்தல் நடக்க இருக்கின்றது.

இத்தேர்தலில் சிறப்பம்சம் என்னவென்றால் பாரதிய ஜனதா கட்சியும். காங்கிரஸ் கட்சியும் நேரடியாக போட்டியை சந்திக்க இருக்கின்றது.கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த பாஜக கட்சியின் பொன் ராதாகிருஷ்ணன் இம்முறையும் களமிறங்க உள்ளார்.

இவரை எதிர்த்து வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகின்றார். எனவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி கலை கட்டியுள்ளது.கன்னியாகுமரி தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதியில் மூன்று தொகுதிகளில் பாரத ஜனதா கட்சி போட்டியிடுகின்றது.இந்நிலையில் பிரதமர் மோடி இம்மாத இறுதியில் கன்னியாகுமரிக்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கின்றார்.

Leave a Reply