TN Election News: அனைத்துக் கட்சிகளையும் மிஞ்சிய கமல்ஹாசன்… அட்டகாசமான தேர்தல் அறிக்கை வெளியீடு !

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி சமத்துவ மக்கள் கட்சி,ஐஜேகே கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்குகின்றது.

இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தேர்தல் அறிக்கையை இன்று காலை வெளியிட்டார்.அதில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ் நாட்டினை உயர்த்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

தனது கட்சியின் முக்கியமான தேர்தல் அம்சங்களை கமலஹாசன் ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ளார்.

1.நேர்மையான மக்கள் ஆட்சி அமைக்கப்படும்.

2.விவசாய உற்பத்தி மற்றும் சேவை துறை வளர்ச்சியினை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தைக் அடுத்த 10 ஆண்டுகளில் 60 முதல் 70 லட்சம் கோடியாக உயர்த்துதல்.

3.தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.

4.நீர்நிலை மேம்பாடு,தண்ணீர் மேலாண்மை மற்றும் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குதல்.

5.நதிநீர் இணைப்பு திட்டம்.

6.அறிவியல் சார்ந்த விவசாயத்தில் நிரந்தர பசுமைபுரட்சி திட்டம்.

7.மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.

8.ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் அமல்படுத்த அப்துல்கலாம் புரா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

9.சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் 185 ஆலைகள் மாற்றப்படும்.

10.தமிழகத்தில் படிப்படியாக மது கடைகள் மூடப்பட்டு.மது விலக்கு அமல்படுத்தப்படும்.

11.அரசு வேலைவாய்ப்பில் 69% உறுதி.

12.கடனில்லா தமிழகம்.

13.தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் மருத்துவ படிப்பில் நீட் தேர்வுக்கு பதில் இனி நீட் தேர்வு நடத்தப்படும்.

அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதி அளிக்கப்படும் போன்ற சில முக்கியமான தேர்தல் அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply