அமமுக தலைமையை ஏற்றால் கூட்டணிக்கு ரெடி-டிடிவி தினகரன்

TTV-Dhinakaran

அமமுக தலைமையை ஏற்றுக்கொண்டால் அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து விடுபட்ட பின்னர் சசிகலாவை அவரது வீட்டில் இன்று நேரில் சந்தித்து பேசிய கட்சியின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தினகரன் அமமுகவை தலைமையாக ஏற்கும் எந்த கட்சியாக இருந்தாலும் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்று கூறினார்.

மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் உத்தேசம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமமுக தலைமையை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஏற்றுக்கொண்டால் நாங்கள் கூட்டணிக்கு தயார் என்று தினகரன் பதிலளித்துள்ளார். மேலும் மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட் குறித்து தான் வெளிப்படையான எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து விவாதித்து வருவதாகவும் கூறினார்.

இதுவரை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பற்றி அதிர்ச்சியான கருத்துக்களை வெளியிட்ட டிடிவி தினகரன் இன்று தன்னுடைய தலைமையை ஏற்றுக் கொண்டால் கூட்டணிக்கு தயார் என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சசிகலாவை சந்தித்தவுடன் இக்கருத்தினை தினகரன் வெளியிட்டுள்ளதால் அதிமுக தலைமை இடத்தினை சசிகலா பிடிப்பதற்கான யுக்தியாக இருக்குமோ என்றும் சலசலக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply