2020-ஆம் ஆண்டின் 7 சிறந்த ஆன்ராய்டு கேம்கள்

By The News Voice

பல்வேறு தொழிநுட்ப வளர்ச்சிகள் நம்மை ஆட்கொண்டாலும் அவை எல்லாவற்றையும் கடந்து ஒரு படி மேல் நிற்கின்றது மொபைல் கேம்களின் வருகை.ஃபிரீ கேம்களுக்கு மக்களிடத்தில் மவுசு இருந்தாலும் ரக ரகமான பிரீமியம் கேம்களும் ஒவ்வொரு வருடமும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் மக்கள் மனதில் இடம்பிடித்த 7 சிறந்த கேம்களை காணலாம்.

pinterest

கால் ஆப் டூட்டி- மொபைல்

மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினை பெற்று 2020- ஆம்ஆண்டின் கேம் ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கின்றது கால் ஆப் டூட்டி- மொபைல் எனப்படும் கேம்.ஒரே நேரத்தில் 100 விளையாட்டு வீரர்கள் ஒருவரோடு ஒருவர் யுத்தம் செய்யும் பிவிபி எனப்படும் சிறப்பம்சத்துடன் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்யலாம் என்பதே இவ்விளையாட்டின் சிறப்பம்சம்.

pinterest

அமாங் அஸ்

ஊரடங்கு நேரத்தில் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்ற கேம்தான் அமாங் அஸ் எனப்படும் இன்டர்நெட் கேம். பல்வேறு விளையாட்டு வீரர்கள் பங்கேற்று மோசடிகாரனை கண்டுபிடிக்கும் சுவாரஸ்யமான இன்டர்நெட் கேம்தான் அமாங் அஸ்

pinterest

கிளாஸ் ஆப் கிளான்ஸ்

pinterest

2012-ஆம் ஆண்டில் அறிமுகமானாலும் மவுசு குறையாமல் இன்றளவும் கூகுள் பிளே ஸ்டோரின் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது கிளாஸ் ஆப் கிளான்ஸ்.

2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத கேம்தான் இந்த ஃபிரீ பயர்.2020-ம் ஆண்டில் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த கேம் பப்ஜி க்கு அடுத்தபடியாக மக்களிடையே அதிகம் பிரபலமடைந்துள்ளது.

pinterest

மைன் கிராப்ட்

உலகளவில் அனைத்து வயதினரும் விரும்பும் ஒரு கேம் என்றால் அது மைன் கிராப்ட்.இதுவரை இந்த கேமினை விளையாடாதவர்களும் முதல் முறை விளையாடும்பொழுதே மனதினை லயிக்கச்செய்யும் சிறப்பு இந்த விளையாட்டிற்குண்டு.

pinterest

2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட இந்த வீடியோ கேமானது மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்துள்ளது.புது புது யுக்தியினை யோசிக்க தூண்டும் இந்த விளையாட்டானது பல வெர்சன்களையும், தொடர்களையும் கொண்டுள்ளது.

pinterest

ஜெஞ்சின் இம்பாக்ட்

மக்களுக்கு பிடித்தமான சிறந்த ஆக்சன் கேம் என்றால் அது ஜெஞ்சின் இம்பாக்ட் தான்.மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் ஆகிய இரண்டிலும் விளையாட முடியும் என்பதே இதன் சிறப்பம்சம்.

pinterest

மேற்கூறப்பட்டவை 2020- ம் ஆண்டில் மக்கள் மனதில் இடம்பிடித்த கேம்கள் .மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கேற்ப மக்கள் மனதினை கவரும் புது புது கேம்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.அவை மக்கள் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களை பொறுத்திருந்து காணலாம்.

pinterest