இரத்ததானம் செய்யும்பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

unsplash

பல்வேறு வகையான தானங்கள் இருந்தாலும் தானத்திலேயே உயிர்காக்கும் தானம் என்பது ரத்ததானம் ஆகும்.  இன்று ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இருப்பதால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்கின்றனர்.

unsplash

ரத்ததானம் செய்பவர்கள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவாகும்.

ரத்த தானம் செய்ய முன்வருபவர்களுக்கு முதலில் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சரிபார்க்கும் பரிசோதனை மேற்கொள்வார்கள்.

unsplash

ரத்ததானம் செய்த பின்பு அதிக சோர்வு ஏற்படும் என்பதால் ஊட்டச்சத்து நிறைந்த உணவினை உட்கொள்ளவேண்டும்

unsplash

ரத்தம் தானமாக கொடுப்பதற்கு முன்பு குறைந்த கொழுப்புடைய உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு கொண்ட உணவுகள்,ரத்தத்தை பரிசோதிக்கும் செயல்முறைக்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.

unsplash

ரத்ததானம் செய்ததற்கு பின் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலுக்கு தேவையான இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கு உதவும்.

unsplash

புதிய ரத்த அணுக்கள் உருவாவதற்கு போலிக் அமிலம் இன்றியமையாதது.மருத்துவர்களின் பரிந்துரையின் படி போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

unsplash

ரத்ததானம் செய்வதென்பது நன்மையளிக்கும் செயலாக இருந்தாலும் நம் உடல் நலனில் அக்கறை கொள்வதும் அவசியம்.