BY: The News Voice

M.S.G அலர்ஜி சைனீஸ் ரெஸ்டாரண்ட் நோய்க்கான அறிகுறிகள்

மோனோசோடியம் குளுட்டமேட் (எம்.எஸ்.ஜி) என்பது  உணவில்   சுவையை அதிகரிக்கப் பயன்படுகின்றது.ஆனால் இது அலர்ஜி மற்றும் பிறபக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது.

சைனீஸ் உணவகத்தில் உணவருந்திய பின்பு இவ்வறிகுறிகள் ஏற்படுவதால் இது சைனீஸ் ரெஸ்டாரண்ட் நோய் என அழைக்கப்படுகின்றது.

எம்.எஸ்.ஜி கலந்த உணவினை உட்கொள்ளும்பொழுது பெரும்பாலான மக்களுக்கு எதுவும் ஏற்படுவதில்லை.ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அலர்ஜியினை ஏற்படுத்துகின்றது.

எம்.எஸ்.ஜி உணவின் சுவையை உணவின் சுவையினை மேம்படுத்துவதால் இது உணவுத்துறையில் முக்கியமான பொருளாக கருதப்படுகின்றது.

இது பெரும்பாலும் குளுட்டமேட் என்ற அமினோ அமிலத்தால் இயற்கையாகவே சில உணவுகளில் காணப்படுகிறது.மேலும் வெல்லப்பாகு, கரும்பு அல்லது ஸ்டார்ச் போன்றவற்றினை நொதிப்பதாலும் உற்பத்திசெய்யப்படுகின்றது.

சீன உணவுகளில் மட்டுமல்லாது பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு சிப்சுகள் போன்றவற்றிலும் எம்.எஸ்.ஜி கலக்கப்படுகிறது.

பொதுவானஅறிகுறிகள்:

தலைவலி - வியர்வை - குமட்டல் - சோர்வு - தோல் வெளுப்பு

கடுமையான அறிகுறிகள்

மார்பு வலி - விரைவான இதய துடிப்பு - சுவாசிப்பதில் சிரமம் - முகத்தில் வீக்கம்

எம்.எஸ்.ஜி கலந்த உணவுகள் உட்கொள்ளுவதை தவிர்ப்பதன் மூலம் இந்நோயிலிருந்து விடுபடலாம்.