PINTEREST

BY: The News Voice

நம் முகத்திற்கேற்ற கண்ணாடி பிரேம்களை தேர்வு செய்வது எப்படி?

முதலில் நமது முகஅமைப்பினை அறிவது அவசியம்.அதாவது நம் முகம்  வட்டம்,சதுரம்,ஹார்ட்,முக்கோணம் மற்றும் ஓவல் இவற்றில் எந்த ஷேப் என்று கணித்து அதற்கேற்றவாறு பிரேமினை தேர்வு செய்ய வேண்டும்.

PINTEREST

PINTEREST

நம்மில் பலருக்கும் ஒழுங்கான முக அமைப்பு இருக்காது.அதாவது வட்டமான கண்ண அமைப்பு இருப்பவர்களுக்கு நீளமான நெற்றி இருக்கலாம்.எனவே முகஅமைப்பினை சரியாக கணிக்க வேண்டும்.

PINTEREST

உங்கள் முகத்தின் வடிவம் மற்றும் அம்சங்களை நீங்கள் கணித்ததும் அதற்கேற்றவாறு பிரேம் ஜோடிகளை தேர்வு செய்யலாம்.

PINTEREST

வட்டமான முகத்திற்கு செவ்வக வடிவிலான பிரேம்கள் மிடுக்கான தோற்றத்தினை தரும்.

PINTEREST

சதுரமான அமைப்புடைய முகத்திற்கு வளைவுகள் கொண்ட பிரேம்கள் பொருத்தமானதாக இருக்கும்.

PINTEREST

இதய வடிவ முகங்களில் பரந்த நெற்றி மற்றும் குறுகிய தாடையினை கொண்டிருக்கும்.எனவே நாம் தேர்வு செய்யும் பிரேம் அதிகமான பரப்பளவு கொண்டதாக இருக்க வேண்டும்.

PINTEREST

ஓவல் வடிவ முகங்களுக்கு வண்ணமயமான அடர்த்தியான பிரேம்கள் பொருத்தமானதாக இருக்கும்.

PINTEREST

முக்கோண வடிவிலான முக அமைப்பு அரிதாக சிலருக்கு மட்டுமே இருக்கும்.இந்த முகச்சாயலுக்கு கேட் ஐ எனப்படும் பிரேம்கள் பொருத்தமாக இருக்கும்.

ஆனால் அவை ஜா லைன் எனப்படும் முக வாய்கட்டை கோட்டினை விட அகலமான பிரேமாக இருக்க வேண்டும்.

உங்கள் முகத்திற்கேற்ற பிரேம் எது என்று தெரிந்து கொண்டீர்கள் அல்லவா?இனி பிரேம் தேர்வு செய்யும் பொழுது உங்கள் முகத்திற்கேற்ற அழகான பிரேமினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.