பெண்களுக்கான பிளஸ்-சைஸ் மாலை நேர ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

BY: The News Voice

PINTEREST

பருமனான பெண்களுக்கு மாலை நேர உடைகளை தேர்தெடுப்பது என்பது கடினமான டாஸ்க் தான்.

PINTEREST

நமக்கேற்ற சரியான ஆடையினை  தேர்ந்தெடுக்கா விட்டால் அது சாக்கினை அணிந்து போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தக்கூடியது..

PINTEREST

மாலை நேரத்தில் உள்ளாடைகளை அணிவதிலும் கவனம் வேண்டும். சரியான சைஸ் கொண்ட உள்ளாடைகளை அணியாவிட்டால் அது உடலில் தடிப்பினை ஏற்படுத்தக்கூடும்.

PINTEREST

நீங்கள் மேலே டைட்டான உடைகளை அணிகின்றீர்கள் என்றால் எப்பொழுதும் அணியக்கூடிய உள்ளாடையினை அணியவேண்டிய அவசியமில்லை.உடலுக்கு மேலும் அழுத்தம் ஏற்படுத்தாத வண்ணம் மெல்லிய உள்ளாடையினை அணியலாம்.

ஒரு டிசைனருக்கும் மற்றொரு டிசைனருக்கும் அளவானது மாறுபடலாம். எனவே ட்ரெஸ்ஸில் உள்ள நம்பரினை கணக்கில் கொள்ளாமல் உடை நமக்கு பொருத்தமாக இருக்கின்றதா என பார்க்கவேண்டும்.

PINTEREST

நீங்கள் கட் கொண்ட மாலை நேர உடைகளை அணிய விரும்பினால் A-லைன் கட் கொண்ட உடைகளை அணியும் பொழுது உங்கள் முன்னழகு மற்றும் பின்னழகு இரண்டினையும் மேம்படுத்தி காட்டும்.

PINTEREST

PINTEREST

டார்க் கலர்ஸ் உங்களை மெலிதாக காட்டும். அதற்கேற்றவாறு  லைட் கலரில் உபகரணங்கள் அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.

PINTEREST

பூக்கள் கொண்ட டிசைனுடன் கூடிய ஆடைகள் நம்மை அழகாக காண்பிக்கும்.ஆனால் பெரிய பூக்கள் குண்டாக இருக்கும் பெண்களுக்கு பொருத்தமாக இருக்காது மாறாக சிறிய பூக்கள் கொண்ட ஆடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

PINTEREST

மாலை நேர உடைகளும் ஸ்பெஷலானவைதான்.அவற்றை தேர்ந்தெடுக்கும் பொழுதும் உங்களுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்தால் நீங்கள் அழகுடன் மிளிர்வது நிச்சயம்.