PINTEREST

உடைக்கபட வேண்டிய  ஃபேஷன் விதிகள்

BY: The News Voice

உயரமான பெண்கள் ஹீல்ஸ் அணியக்கூடாது என்பது கூறப்படுவதுண்டு.

ஆனால் ஹீல்ஸ் அணிந்து சவுகரியமாக நடக்க முடியுமென்றால் உயரமான பெண்களும் தாராளமாக ஹீல்ஸ் அணியலாம்.

PINTEREST

PINTEREST

குட்டையான பெண்களும் நீளமான ஆடைகளை அணியலாம். நேர்த்தியாக இருக்கும் பொழுது அவை உங்களை உயரமாக தோற்றமளிக்கும்.

பொட்டுகளுடன் பூக்கள் கலந்த டிசைன் மற்றும் நீளமான கோடு போட்ட டிசைன் என இரண்டு டிசைன்களையும் ஒன்றாக தைத்தும் அணியலாம்.அவை புதுமையான தோற்றத்தினை கொடுக்கும்.

PINTEREST

நீங்கள் பிரகாசமாய் இருக்கின்றீர்கள் என்று நீங்கள் உணர்ந்தாலே போதும்.பிறரது கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டாம்.

ஃபேஷன் பற்றி அதிகம் படித்திருக்க தேவையில்லை உங்களுக்கு என்ன தேவையென்ற புரிதல் இருந்தால் போதுமானது.

PINTEREST

நகைகள் என்பது தனிப்பட்ட விருப்பத்திற்குரிய விஷயம்.பிறரது பார்வைக்காக நீங்கள் அதிகம் அணிய வேண்டுமென்ற அவசியமில்லை.

PINTEREST

PINTEREST

மற்றவரை போன்று நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை.நமக்கென்று தனித்துவத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஸ்டைல் என்பதை அனைவராலும் கற்றுக்கொள்ள முடியாது என சிலர் கூறுவதுண்டு.ஆனால் அப்படியல்ல.போகின்ற போக்கில் எல்லோராலும் கற்றுக்கொள்ளமுடியும்.

PINTEREST

PINTEREST

ஒருவர் அணிந்திருக்கும் ஆடையினை கொண்டு அவர்களை அனுமானிப்பது எளிது.

ஆனால் இதற்கு மட்டுமே நாம் முக்கியத்துவம் கொடுக்க கூடாது.

ஃபேஷன் என்பது நம் வாழ்வின் ஒரு சிறிய அங்கம் மட்டுமே.