முகத்தை பொலிவாக்கும் எண்ணெய்கள்

April 3, 2021

Pinterest

நம் முகத்தினை பளபளப்பாக்க செயற்கையாக தயாரிக்கப்பட்ட பல வகையான கிரீம்கள் ஃபேஸ் பேக்குகள் ஆகியவற்றை உபயோகிக்கின்றோம்.

Pinterest

செயற்கையான பொருட்கள் இல்லாமல் இயற்கையான எண்ணெய்களை கொண்டு நம் சருமத்தினை பளிச்சென்று வைத்திருக்க முடியும். அவற்றினை நாம் இப்பொழுது காணலாம்.

Pinterest

உலர்ந்த பாதாம் கொட்டையிலிருந்து பாதாம் எண்ணெய் பெறப்படுகின்றது.இது சருமத்தை ஈரப்பதத்துடன், பளபளப்பாக வைக்கின்றது.

Pinterest

கொழுப்புசத்து அதிகம் உள்ள ஆமணக்கு எண்ணெயை தோலில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து குளிக்கும் போது சருமம் அதன் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கின்றது.

Pinterest

தேங்காய் எண்ணெயினை தலைமுடி நன்றாக வளர பயன்படுத்துகின்றோம். ஆனால் தேங்காய் எண்ணெய் தோலினை மென்மையாகவும்,மினுமினுப்பாகவும் வைக்க பயன்படுகிறது.

Pinterest

ஆலிவ் ஆயில் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தவிர்த்து தோலை பளபளப்பாகவும் ஈர தன்மையுடனும் வைக்கின்றது.

Pinterest

ஆன்டி-பாக்டீரியல் தன்மை நிறைந்த வேப்ப எண்ணெய் தோல் சம்மந்தமான நோய்களான அரிப்பு,சொரியாசிஸ் போன்றவற்றிலிருந்து சருமத்தினை காக்கின்றது.

Pinterest

மெழுகு பொருட்கள் நிறைந்த ஜோஜோபா எண்ணெய் தோலின் ஆழம் வரை ஊடுருவி தோலினை மென்மையாக வைக்க வல்லது.

Pinterest

மேலே கூறப்பட்ட எண்ணெய்களை முகத்தில் தடவி மசாஜ் செய்யும் போது சருமம் ஆரோக்கியமாக இருப்பவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது.

Pinterest