கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?

March,16,2021

Pinterest

கோடை காலத்தில் நாம் வெயிலில் செல்ல நேரிட்டால் வெப்பத்தின் காரணமாகவும், வியர்வையின் காரணமாகவும் தலைமுடி வெகுவாகப் பாதிக்கப்படும். நம் தலை முடியை எப்படி பாதுகாக்கலாம் என பார்க்கலாம்.

Pinterest

வெயிலில் செல்லும் போது துணியால் தலையை நன்றாக மறைத்து  கொள்ளவும்.இதன் மூலம் புற ஊதாக் கதிர்களிலிருந்து கூந்தலை ஈரப்பதம் இழக்காமல் பாதுகாக்க முடியும்

Pinterest

வெயில் காலத்தில் கூந்தலை காய வைக்கும்பொழுது ஹேர் ட்ரையரை பயன்படுத்தாமல் இயற்கையாகவே காய வைப்பது நல்லது.

Pinterest

கோடைகாலத்தில் தேங்காய் எண்ணெய்,ஆலிவ் எண்ணெய்,அவகோடா எண்ணெய் ஆகியவை உபயோகித்தால் உங்கள் தலையை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Pinterest

Pinterest

தலை குளிக்கும் முன்பு சிறிது எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து பின்பு ஷாம்பூ உபயோகிப்பதன் மூலம் தலையின் ஈரப்பதத்தை பாதுகாக்கலாம்.

Pinterest

நீச்சல் குளத்தில் குளிக்கும் போது  குளிப்பதற்கு முன்பும், அதற்கு பின்பும்  தலை முடியினை சுத்தமான நீரால் அலச வேண்டும்.

Pinterest

தலைக்கு ஐயர்னிங் மற்றும் கர்லிங்  பண்ணுவதை தவிர்ப்பது நல்லது.

Pinterest

தலையின் ஈரப்பத்தினை தக்கவைத்துக்கொள்ள மென்மையான கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

Pinterest

கோடை காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதும் உங்கள் பராமரிப்புக்கு அவசியம்.

Pinterest