சருமத்தை மினுமினுக்க செய்யும் தேன்

மருத்துவ குணங்களும் பயன்களும்

March,18

Pinterest

ஆதிகாலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உணவுப் பொருள் என்றால் அது தேன்தான்.

Pinterest

இன்றளவும் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பெரும்பாலான மருந்துகள் தேனினை  வைத்தே செய்யப்படுகின்றன.

Pinterest

தேனை உண்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நமக்கு தெரியும் ஆனால் அது சருமத்திற்கு எவ்வித நன்மைகள் புரிகின்றன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

Pinterest

தேனில் உள்ள நொதிகள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. எனவே சருமம் நன்கு மென்மையாக இருக்கும்.

Pinterest

வறண்ட சருமத்தில் ஒரு டீஸ்பூன் தேனை தடவி குளிர்ந்த நீரில் கழுவ சருமத்தில் உள்ள துளைகள் சுத்தப்படும்.

Pinterest

தேங்காய் எண்ணெயுடன் தேன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யும்போது முகம் மென்மையாக இருக்கும்.

Pinterest

எலுமிச்சை பழ சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவ முகம் பொலிவடையும்.

Pinterest

தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தில் பருக்கள்  வராமல் தடுக்கின்றது.

Pinterest

தேனை முகத்தில் தொடர்ந்து  தடவ சரும சுருக்கங்கள் ஏற்படாமல் இருக்கும்.

Pinterest