உணவு பொருள்களில் கலப்படத்தினை கண்டறிவது எப்படி?-2

March,16,2021

pinterest

நாம் அன்றாட உணவில் கலப்படம் எப்படி செய்கின்றார்கள் என்பதையும் அதை எப்படி சோதனைகள் மூலம் கண்டறிவது என்பதையும் ஏற்கனவே பார்த்திருந்தோம். அவற்றின் தொடர்ச்சியை தற்போது பார்க்கலாம்.

pinterest

கிராம்பில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு வெறும் கிராம்பு மட்டும் வைத்திருப்பார்கள் எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்.

pinterest

புல்லின் விதைகள் நிலக்கரி கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டு சீரகத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். கைகளில் தேய்க்கும்போது கருமை படியும்.

நெய்யில் மசித்த உருளைக்கிழங்கு, வனஸ்பதி ரவை போன்றவை சேர்த்திருப்பார்கள். ஹைட்ரோ குளோரிக் அமிலம், உருக்கிய நெய்  சிறிது சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் குலுக்கவும். வனஸ்பதி சேர்த்திருந்தால் நெய் சிவப்பாக மாறும்.

pinterest

வெல்லத்தில் மெட்டானில் எனப்படும் ரசாயனம் கலக்கப்படுகிறது. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை கலந்தால் வெள்ளை நிறமாக மாறும்.

pinterest

ரவையில் இரும்புத் தூள் சேர்க்கப்படுகின்றது. காந்தத்தை அருகில் கொண்டு சென்றால்  இரும்புத்தூள் ஈர்க்கப்படும்.

pinterest

பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள். நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்

pinterest

பயன்படுத்திய தேயிலைத்தூள் உலர்த்தி வண்ணமூட்டி திரும்பவும் விற்பனை செய்யப்படுகின்றது. ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.

pinterest

ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.

pinterest