கோடைகாலத்தில்  குழந்தைகளை காப்பது எப்படி ?

April 3, 2021

Pinterest

கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயில் தனது உக்கிரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டத. பெரியவர்களான நமக்கே கோடை வெப்பத்தை தாங்குவது கடினம் குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும்.

Pinterest

கோடை காலம் வந்துவிட்டாலே சூட்டினால் ஏற்படும் நோய்களும் குழந்தைகளை எளிதில் தொற்றிக்கொள்ளும்.கோடைகால நோய்களில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என காணலாம்.

Pinterest

ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலே போதுமானது என உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. தாய்ப்பாலிலேயே குழந்தைகளுக்கு நீர்சத்துக்கள் அனைத்தும் கிடைத்துவிடும்.

Pinterest

ஆனால் ஆறு மாதத்துக்கு மேல், திட உணவு கொடுக்க ஆரம்பித்த பின்பு குழந்தைகளுக்கு தண்ணீர் நிறைய கொடுக்க வேண்டும்.

Pinterest

குழந்தைகள் விளையாட்டுப் போக்கில் தண்ணீர் கொடுக்க மறந்து போவார்கள் நாம் குறிப்பிட்ட இடைவெளியில்  தண்ணீர் கொடுக்க வேண்டும்

Pinterest

2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் விளையாடி விட்டு இரவு தூங்கச் செல்லும் முன் சருமத்தில் உள்ள அழுக்கு நீங்குமாறு குளிப்பாட்ட வேண்டும்.

Pinterest

குழந்தைகளின் உடலில் நீரிழப்பு ஏற்படுவதால் பழச்சாறு அதிகமாக அருந்த தர வேண்டும்.

Pinterest

இளநீரில் குழந்தைகளுக்கு தேவையான சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரைடு இருப்பதால் அவற்றைக் கொடுக்கலாம்.

Pinterest

கோடைகாலத்தில் அம்மை நோய் தாக்கும் என்பதால் அமைக்க தடுப்பூசி போட மறக்க வேண்டாம்.

Pinterest

மேலும் சுவாரசியமான செய்திகளை படிக்க