பெருங்காயத்தை பற்றி அறியாத பல தகவல்கள்

March,15, 2021

pinterest

பெருங்காயம் என்பது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.ஆனால் இதை பற்றி அறியாத தகவல்களையும் மருத்துவ குணங்களையும் காண்போம்.

pinterest

அமெரிக்கர்கள் முதலில் பெருங்காயத்தின் மணத்தினை கொண்டு  ஏளனம் செய்தனர்.மேலும் இதை 'பிசாசின் மலம்' என்று தூற்றினர்.

pinterest

1910-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சல் வந்தபோது பெருங்காயத்தை தாயத்து போல் செய்து கழுத்தில் அணிந்தார்கள். மேலும் அதை 'கடவுளின் அமிர்தம்' எனவும் போற்றினார்கள்.

pinterest

கோடைக்காலத்தில் ஒரு கிளாஸ் மோரில் இம்மியளவு பெருங்காயத் தூளை கலக்கி பருக உடல் குளிர்ச்சி அடையும்.

pinterest

மாதவிடாய் சமயத்தில் பெண்கள் பெருங்காயத்தை எடுத்துக்கொண்டால் கர்ப்பப்பைக்கு நல்லது.

pinterest

பிரசவித்த பெண்களுக்கு பெருங்காயம் சேர்த்து லேகியம் கொடுக்கும் போது வயிற்றில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

pinterest

வாய்வு தரக்கூடிய  உணவுகளான முட்டைக்கோஸ்,பட்டாணி, வாழைக்காய், சீனி அவரைக்காய் ஆகியவை உண்ணும்போது பெருங்காயத்தை சாப்பிட்டால் வாயு தொல்லை இருக்காது.

pinterest

குழந்தைகளுக்கு உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் பெருங்காயத்தை சிறிதளவு சுடுதண்ணீர் கலந்து ஒரு சங்கு கொடுக்கும் பொழுது உணவு நன்றாக செரிமானம் ஆகிவிடும்.

pinterest

குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள் இருக்கும் போது பெருங்காயத்தை சுடு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று வயிற்றில் பற்று போட உபாதை சரியாகும்.

pinterest

மேலும் சுவாரசியமான செய்திகளை படிக்க