உணவு பொருள்களில் கலப்படத்தினை கண்டறிவது எப்படி?

pinterest

March,15,2021

நாம் அன்றாடம் வீட்டிற்கு உபயோகிக்கும் சமையல் பொருட்களில் பலவகையான கலப்படங்கள் கலந்துள்ளன.அவற்றை எல்லாம் நம்மால் பார்த்தவுடனே கண்டுபிடிக்க முடியாது என்பதே இதில் சோகமான விஷயம். ஆனால் சில சோதனைகள் மூலம் நாம் அதை எளிதாக கண்டறியலாம் அவை என்னவென்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

pinterest

சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் கலக்கின்றனர் . சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைக்கும்பொழுது  அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

pinterest

ஏலக்காயில் அதன் மேலுள்ள எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கின்றனர்.இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஒட்டும்.இந்த ஏலக்காயில் மணமிருக்காது.

pinterest

மஞ்சள் தூளில் மெட்டானில் மஞ்சள் நிற ரசாயனம் கலக்கப்படுகிறது. அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாக மாறும்.

pinterest

மிளகாய் தூளில் செங்கல் பொடி மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால்  வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும்.செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும்.

pinterest

காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.

pinterest

கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்

pinterest

அடுத்து வரும் தகவல்களில் மேலும் பல சோதனைகளை காணலாம்.

pinterest