கோவிட் தடுப்பூசி விண்ணப்ப வழிமுறைகள்

By The News Voice

கோவிட் தடுப்பூசி முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக பொது மக்களுக்கான வழிமுறைகளை அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.

தொற்று அறிகுறிகள் கொண்ட  60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிக்கு  விண்ணப்பிக்கலாம்.

மார்ச்-1 முதல் அரசு மையங்களில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.தடுப்பூசி பெற விருப்பமுள்ளவர்கள் கோ-வின் ஆப்பின் மூலம் எளிதாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம் அல்லது cowin.gov.in க்குச் செல்லவும்.

ஆப்பில் நமது தொலைபேசி எண்ணினை பதிவு செய்தவுடன் OTP கிடைக்கப்பெறும்.

ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்து உங்களது விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும்..

தடுப்பூசி போடுவதற்கான சென்டர்,தேதி ஆகியவற்றினை புக் செய்து கொள்ளலாம்.

தகவல்களை பூர்த்தி செய்தவுடன் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்

தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொண்ட பின்பு உங்களுக்கு கொடுக்கப்பட்ட  நேரத்தில் தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம்.

தடுப்பூசி போட்ட பின் அரைமணி நேரம் காத்திருக்கவும்.ஏதேனும் உபாதைகள் இருப்பின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.